வெடியுப்பு 240 கிராம்
படிகாரம் பொரித்தது 60 கிராம்
நவசாரம் 30 கிராம்
3 யையும் தனி தனியே பொடித்து,ஒரு வாயகன்ற மண் சட்டியில் போட்டு பரவலாக வைத்து கரி நெருப்பில் வைத்து துருத்தி கொண்டு நன்கு நெருப்பு உண்டாக ஊதவும்,சட்டியில் உள்ள பொருள்கள் ஓரங்களிலும்,நடுவிலும் உருக ஆரம்பிக்கும்.அப்பொது இன்னும் வேகமாக ஊத தண்ணீர் போல் உருகும்,அப்போது செம்புகை வெளியில் வேகமாக வரும்.அது மூக்கில் சுவாசிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.உடனே சம தரையில் மெல்லியதாக ஊற்றவும்,அப்பள கனத்தில் ஊற்றவும்.உடனே அதிலிருந்து கண்ணாடி,அல்லது பிங்கான் உடையும் சப்தம் வரும்.அதை இடித்து சலித்து காற்று புகாத பாட்டிலில் பத்திர படுத்தவும்.
(வெடியுப்பு ,படிகாரம்,நவ சாரம் )உருக்கி ஊற்றிய மருந்து
உபயோகிக்கும் முறை :
முள்ளங்கி சாறு ,அல்லது பூசணிக்காய் சாற்றில் 3/4 கிராம் முதல் 1 1/2 கிராம் வரை சாப்பிடலாம்.இப்படி தினம் 3 or 4 முறை சாப்பிடலாம்.
1.குடல் நன்றாக சுத்தம் செய்ய :
பெருங்காயம் 1 குண்டுமணி முதல் 3 குன்றி வரையில் வெந்நீரில் கரைத்து அதில் மேற்படி பற்படி பற்பத்தை கலந்து கொடுக்க,அல்லது சுக்கு கஷாயத்தில் பற்படி பற்பத்தை சேர்த்து கொடுக்க அஜீரணம் வயிற்று பொருமல் மலபந்தம் இவைகள் விலகி குடலை நன்றாக சுத்தம் செய்து மலம் சிறுநீர் முதலான மாசுக்களை வெளியாக்கும்.
2.மூத்திர அடைபிற்கும்,சிறுநீரில் அதிக உப்பு இருப்பதற்கும் :
சுத்தி செய்த எட்டி கொட்டையை,கருக்கிய சூரணம் 1/2 குன்றி முதல் 2 குன்றி வரை எடுத்து பற்படி பற்பம் கலந்து (நெருஞ்சில்,நீர்முள்ளி,வெள்ளை சாரணை வேர் )நெருஞ்சில் கஷாயத்தில் கொடுக்கவும்.இது சிறந்த மூத்திர விரோசனகாரி.
3.இருதயம் நன்கு வேலை செய்ய:
எட்டிகொட்டை சேர்ந்த கசாயங்களில் கொடுப்பதானால் இருதயத்துக்கு நன்றாக வேலையைத் தூண்டி பலமளிக்கின்றது.
4.சர்வாங்க வீக்கம்.
5.மகோதரம்.
6.பாண்டு,(anaemia )
7.கல்லீரல் வீக்கம்.
8.மண்ணீரல் வீக்கம் குறைய :
வெள்ளை சாரணை,சுரைக்கொடி,மூக்கத்திச் சாரணை,நீர்முள்ளி,கோவை,வெள்ளிரி விதை நெருஞ்சில்,இவைகளை சமனாக எடுத்து ஒன்றிரண்டாக சூரணித்து கஷாயம் செய்து அதில் மேற்படி பற்பம் கலந்து சாப்பிட குணமாகும்.
9. பெண்களின் மர்ம ஸ்தானத்தில் ஏற்படும் புண்ணிற்கு:
கனேரியா (gonorrhoea )(பெண்குறியின் நீர் தாரையில் சீழ் போன்று மேக நீர் கசிதலாகும்.)புண்ணை ஆற்றுவதற்கு பூசணிக்காய் சாறு அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றில் கொடுக்க குணமாகும்.
10.அதிசாரம்,காலரா,வாந்தி நிற்க :
பார்லி வாட்டரில் பற்பத்தை கலந்து கொடுக்க நிற்கும்.
whats App no.+91 9894618455.


















